×

சில்லி பாய்ன்ட்…

* அயர்லாந்து சென்றுள்ள பாக் அங்கு 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரவில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் டப்ளின் நகரில் இன்று நடக்கிறது.

* தமிழ்நாடு அளவிலான டேபிள் டென்னிஸ் லீக் போட்டியின் 3வது தொடர் மே 11, 12 தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் இந்தப்போட்டி நுங்கம்பாக்கம், நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள அம்பா ஸ்கை ஒன் அரங்கில் நடைபெறும். இந்த தகவல்களை ேபாட்டி நிர்வாகிகள் வித்யாசாகர், பாரத் ராம் ஆகியோர் நேற்று தெரிவித்தனர்.

* வங்கதேசம் சென்றுள்ள இந்திய பெண்கள் அணி 4 டி20 ஆட்டங்களை வென்று தொடரை கைப்பற்றி விட்டது. இந்நிலையில் நேற்று நடந்த கடைசி டி20 ஆட்டத்தில் 20ஓவர் முடிவில் இந்தியா 5விக்கெட் இழப்புக்கு 156ரன் எடுத்தது. ெதாடர்ந்து விளையாடிய வங்கம் 20ஓவரில் 6விக்கெட் இழப்புக்கு 135ரன் மட்டுமே எடுத்தது. அதனால் இந்திய வீராங்கனைகள் 21ரன் வித்தியாசத்தில் வென்றனர். கூடவே தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி வங்கத்தை ஒயிட் வாஷ் செய்தது.

* ரோமில் நடைபெறும் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த 2வது சுற்றில் டாரியா கசட்கினா(ரஷ்யா), ஏஞ்சலிக் கெர்பர்(ஜெர்மனி), ஐரினா பெகு(ருமேனியா) ஆகியோர் வெற்றிப்பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினர்.

The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.

Tags : Pak ,Ireland ,T20I series ,Dublin ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED டி20 போட்டிகளில் அதிக வெற்றியை பெற்ற...